கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் வெளியிட்டார்.
 மொத்தம் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 20 இலட்சத்து 15 ஆயிரத்து 796 வாக்காளர்கள் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 9 இலட்சத்து 91 ஆயிரத்து 527 ஆண் வாக்காளர்களும், 10 இலட்சத்து 23 ஆயிரத்து 976 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 293 பேரும் உள்ளனர்.
அதிக அளவாக விருத்தாசலம் தொகுதியில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 836 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவாக நெய்வேலித் தொகுதியில் ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 24 வாக்காளர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *