
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் வேளிங்கப்பட்டறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் மண்டல போக்குவரத்து பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மண்டல பொருளாளர் வேணுகோபால், மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தலைவர் இராசு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தையல் இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், வேஷ்டி மற்றும் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தமிழகமெங்கும் அ.தி.மு.க-வினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் இவ்விழாவினைச் சிறப்பித்து வருகின்றனர்.



