
தென்காசியில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, தென்காசி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை துவக்கி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் கமல் கிஷோர், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி முடிவடைந்ததாக தெரிவித்தார்.



