
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனசரக அலுவலகத்தில் தற்காலிக பணியாளராகப் பணிபுரிந்து வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த வாலிபர் நேற்று மாலை வழக்கம்போலப் பணிக்குச் சென்ற நிலையில் இரவு உயிரிழந்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் புகாரளித்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்து உள்ள கத்திரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் பிரசாந்த் 22 வயது., இவர் வனத்துறையில் தற்காலிக பணியாளராகப் பணியில் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சென்னம்பட்டி வன சரக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல இரவு பணிக்காக மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு உறவினர்களுக்கு அந்தியூர் வனசரக அலுவலர் ராஜா செல்போனில் தொடர்பு கொண்டு பிரசாந்த் விபத்து ஏற்பட்டு பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.,
மேலும் வனத்துறையினர் கார் மூலமாக நேரில் சென்று பிரசாந்தின் உறவினர்களைக் கத்திரிப்பட்டி கிராமத்திலிருந்து பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரசாந்த் உயிரிழந்து விட்டதாக அவரது உடலைப் பவானி அரசு மருத்துவமனை சவக்கிரங்கில் வைத்து இருப்பதாக வன சரக அலுவலர் ராஜா பவானி அரசு மருத்துவமனைக்கு வந்த பிரசாந்தின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த பிரசாந்தின் உடலைப் பார்க்க உறவினர்கள் கேட்டபோது வனத்துறை சார்பில் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை., இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் வனத்துறை மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் பிரசாந்த் இறப்பில் மர்மம் இருப்பதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திப் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணிக்கு வந்த தற்காலிக பணியாளர் பிரசாந்த் வனப்பகுதிக்குள் சென்றபோது வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் அடித்துக் கொலை செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை தரப்பில் முதல் கட்டமாக., சென்னம்பட்டி வனசரக அலுவலகத்திற்கு செல்போன் மூலமாகச் சென்னம்பட்டி வன சரக்கத்திற்கு உட்பட்ட சனிச்சந்தை பகுதியில் பாம்பு இருப்பதாகவும் அதனைப் பிடிக்க வனத்துறை உதவி தேவையேன பொதுமக்கள் புகாரின் பேரில் அந்த இடத்திற்கு அலுவலக பணிக்காகத் தற்காலிக பணியாளராகப் பணிபுரிந்து வரும் பிரசாந்த் உட்பட மூன்று பேர் சென்றதாகவும் அங்கு அவர் பாம்பைப் பிடிக்க முன்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…

