TASMAC Close: 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…

TASMAC Close: தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த இரண்டு நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். உத்தரவை மீறிச் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள்மீது சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *