TASMAC: 20 சதவீதம் போனஸ்!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்  அளித்துள்ள நிலையில் கையெழுத்தானது.

தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முடிவாகி உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்  அளித்துள்ள நிலையில், கையெழுத்தானது. அரசு வழங்கும் 20 சதவீத தீபாவளி  போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *