Central Board of Direct Taxes: 11.5 கோடி பான் கார்டுகளை முடக்க திட்டம்!

Advertisements

ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண்ணை வருமான வரித்துறை வழங்குகிறது. நாட்டில் வருமானம் பெரும் அனைவருக்கும் இந்த பான் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது.

Advertisements

நீண்ட காலமாகவே இதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக 30 ஜூன் 2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என வருமானத்துறை அறிவுறுத்தியது. ஜூலை 1 2023 முதல், இணைக்கப்படாத PAN எண் செயலிழக்கும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகளை முடக்கி ஒன்றிய நேரடி வரி விதிப்பு வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ள ஒன்றிய நேரடி வரி விதிப்பு வாரியம், ஆதாருடன் பான் கார்டுகளை இணைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

பான்-ஆதார் இணைப்புக்கான கெடு 2023, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 57.25 கோடி பேர் பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் காலக்கெடுவை பல முறை நீட்டித்தும், பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்காத 11.50 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் இந்த பான் கார்டுகளை நிரந்தரமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *