தெற்காசிய கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
தெற்காசிய கால்பந்து தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், பாகிஸ்தான் வீரர் ஆலம் கிர் காசி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆனால், இரண்டாவது பாதியில் இந்திய அணியின் சுஹைல் அகமது பட், சந்தீப் நந்தி ஆகியோர் தலா ஒரு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும் 10ஆவது முறையாக பட்டத்தை வென்றுள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.


