Narendra Modi: 75 நாளில் 5 வது முறையாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி!

Advertisements

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாகத் தமிழகத்தை குறி வைத்துத் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார்.

நாகர்கோவில்: இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதற்காக இன்று காலை அவர் விமானம்மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் காலை 11 மணிக்குக் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்கிறனார்.

அங்கிருந்து பிரதமர் மோடி கார்மூலம் புறப்பட்டுப் பொதுக்கூட்ட மேடைக்குச் சென்று பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் மதியம் 12.15 மணிக்குப் பிரதமர் மோடி மீண்டும் கார்மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு புறப்படுகிறார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் மோடி காரில் வந்து- செல்லும் சாலை ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து குமரி மாவட்ட போலீசாரென மொத்தம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *