சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலவும் ‘அக்வான்’ புயல், மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நேற்று அதிகாலை நகர்ந்து, மாலை மத்திய-மேற்கு வங்கக்கடற்பகுதியில் தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மிகத் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
மேலும் வடமேற்கு திசையிலேயே நகரும் இந்தப் புயல், வருகின்ற 20ஆம் தேதி நண்பகலில், நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாகக் கடக்கக்கூடும். இதன்காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.

