தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியைத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு கோரி விரிவான ஆவணத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். தொடர்ந்து சென்னை நுழைவுச் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மற்றும் முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்து மத்திய அமைச்சருடன் கலந்துரையாடினார். மேலும், திருச்சி – கரூர் – கோயம்புத்தூர் 230 கிலோ மீட்டர் பசுமை வழி நெடுஞ்சாலைக்கு விரைந்து ஒப்புதல், சென்னை – கோயம்புத்தூர் – தூத்துக்குடி தொழில் வழித்தட விரைவுச் சாலை மற்றும் புதுச்சேரி – கிருஷ்ணகிரி நான்குவழிப் பணிகள் மற்றும் வாகனச் சுரங்கப்பாதை உள்ளிட்ட சாலைப் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.



