Tamizhaga Vetri Kazhagam: தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த கமல்!

நடிகர் விஜய்க்கு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பங்கேற்க உள்ள முடிவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

சென்னை: அரசியலில் திரைப்பட நடிகர்கள், பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், நேற்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நடிகர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய கமல்ஹாசன், கட்சி தொடங்கிய முடிவுக்கு பாராட்டுகளும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பங்கேற்க உள்ள முடிவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *