நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!

Advertisements

மூன்றாவது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில், இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப், போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 10 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தப், போட்டியில் சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடிய அபிஷேக் சர்மா  20 பந்துகளில் 68 ரன்களை குவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *