
ஏற்காடு:
ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில், கடந்த சில வாரங்களாக இரவில் கடும் குளிரும், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும் காணப் படுகிறது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார் அலுவலங்களில் வேலைக்குச் செல்பவர்கள், எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பனி மூட்டத்தால் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஏற்காடு மலைப்பாதை, அண்ணாசாலை மற்றும் மாற்றுப் பாதையான குப்பனூர் வழியாகச் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிப் பொழிவு காணப்படுகிறது.
காலை 8.30 மணிவரை பனி மூட்டத்தால் சாலைகள் சரியாகத் தெரிவதில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்.
புயல் மழைக்கு பிறகு ஏற்காட்டில் கடும் குளிர், பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
