ஹாங்காங்கில் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்ஸ் ஈலாவை வீழ்த்தி அமெரிக்காவின் கிளாரி லியூ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஹாங்காங்கில் ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்ஸ் ஈலாவை எதிர்த்து அமெரிக்காவின் கிளாரி லியூ விளையாடினார். இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய கிளாரி லியூ 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஈலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் தனது முதல் டபிள்யூ.டி.ஏ. டூர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். உலகத் தரவரிசையில் 102 ஆவது இடத்தில் இருந்த கிளாரி லியூ, 17- ஆவது இடத்தில் இருந்த ஈலாவை வீழ்த்தியது அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.



