அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்!

தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு அமைச்சர் மரியவில்சன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சட்டமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “தனது மதம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், “தனது மதம் தனக்குக் கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சட்டமன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.  எனவே, உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *