தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்பதை வலியுறுத்தி, முதலமைச்சர் விஜய் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கிய இக்கூட்டத்தொடரின் முதல் நாள் 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் மரியா வில்சன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் 2026-27-க்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சட்டமன்றப் பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் மிக முக்கியத் தனித்தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதலமைச்சர் விஜய் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்கிறார்.



