தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – ,வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Advertisements
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என்று, வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *