மாநில உரிமைகளைக் காப்பதில் திமுக உறுதியாக இருக்கும் – மு.க.ஸ்டாலின் உறுதி!

Advertisements

மேகதாது அணைக்கு எதிராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்  எனறு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில், இன்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், ஆன்லைன் வாயிலாக நடைப்பெற்றது. கூட்டத்தில் மேகதாது அணை குறித்தும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படும் மறுவரையறை மசோதா உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

அதில், மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள் என்றும், ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும், மாநில உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும் என்றும், தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய், ஒவ்வொரு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்படுவார்கள் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *