ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஐதராபாத் – டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன. 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடக்கும் 55வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டமானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலும், டெல்லி அணி 5வது இடத்திலும் உள்ளது.


