சமூக நீதித்துறை பெயர் மாற்றம் விவகாரம் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் நலத்துறையைச் ‘சமூக நீதித்துறை’ என பெயர் மாற்றம் செய்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட துறையை சமூக நீதித்துறை என மாற்றி இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலை சிறத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய காவலர் சீருடைப் பணியாளர் தேர்வு தள்ளிவைக்கப்படுவதால், வயது வரம்பைக் கடந்து பாதிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கான வயதுத் தகுதியைத் தளர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

 

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் நலத்துறையைச் சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்திருப்பது, இப்போது பேசு பொருளாக மாறியிருப்பதாகத் தெரிவித்தார். எனவே, தமிழ்நாடு அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் உருவச் சிலை திறப்பது தொடர்பான பிரச்சனையில் நேரடியாக முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “தமிழக வெற்றிக் கழக அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்பது மக்களின் கட்டளை என்றும், இந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்தவொரு முகாந்தரமும் இல்லை என்று தான் பெரிதும் நம்புவதாகவும் திருமாவளன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *