தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

மத்திய அரசு நாடு முழுவதும் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளார்.

இந்த 75 ரயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய ரயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் குறிப்பாக, சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள் முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டு, திறக்கப்பட உள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *