கேரளாவில் கொரோனா பாதித்து 2 பேர் உயிரிழப்பு..! சுகாதார துறை தகவல்..!

உலக அளவில் கொரோனா பாதிப்பு என்பது பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 வருடங்களாக கொரோனாவின் தாக்கம் பயங்கரமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனா். கொல்லம் மாவட்டம் தலவுர் பகுதியை சேர்ந்த 59 வயது நபரும், திருவனந்தபுரத்தில் வாழயிலா பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்துள்ளனா். அவர்கள் 2 பேரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை சுகாதார துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கேரளாவில் அடுத்த சில வாரங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று வேகமெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சுகாதார துறை சார்பில் கூறுகையில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *