“ஆளும் கட்சியைத்தான் விமர்சிக்க முடியும். எதிர்க்கட்சி செத்த பாம்பு; அதை பேசி என்ன செய்ய முடியும்?” என்று யூடியூபர் சவுக்கு சங்கர் காட்டமாக தெரிவித்தார். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை சார்பு செயலாளரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சவுக்கு ஊடகத்தை முடக்குவதற்கு காவல் ஆணையாளர் செயல்பட்டு வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
சவுக்கு சங்கர் தனது வீட்டில் தாக்குதல் நடந்த பிறகு, தனது யூடியூப் சேனலை நடத்துவதில் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாக தெரிவித்தார். “எனது யூடியூபில் பணி செய்யும் இருவரான சத்தியமூர்த்தி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரை நேற்று திருமங்கலம் மற்றும் கே.கே.நகர் காவலர்கள் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் நெருக்கடி கொடுக்கின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் கட்டிய விஷயத்தை இப்போது ஏன் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காவல்துறை தற்போது நெருக்கடி கொடுக்கிறது” என்று அவர் விளக்கினார்.இந்நிலையில் காவல்துறை சார்பில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.ஆளும் கட்சி செய்யும் அனைத்து தவறுகளை சுட்டி காட்டுவதிலும் , எதிர்த்து கேள்வி கேட்பதிலும் அவர் பணியை திறம்பட செய்து வந்தார்.
இந்நிலையில், பெண் காவலர்களை தவறாக பேசினார் என்று சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கக்து.


