பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு முன்பு மிசோரம் சென்று புதிய இரயில் பாதையைத் திறந்து வைத்தார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்குப் பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர், மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இந்திய இரயில்வே நெட்வொர்களுடன் இணைக்கும் 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் மதிப்பிலான பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையைத் திறந்து வைத்தார். இதையடுத்து, பிரதமர் மோடி மோசாமான வானிலை காரணமாக லெங்புங் விமான நிலையத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலமாக ஐஸ்வாலில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், அவர் மணிப்பூருக்குச் சென்று 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ளத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மணிப்பூர் செல்வதால் பிரதமர் மோடிக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.


