Advertisements

எம்புரான் படத்தில் முல்லைபெரியாறு தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் எம்புரான் படம் கூட்டாச்சி தத்துவதற்கும் தேச ஒருமைபாட்டிற்கு எதிராக காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தமிழகத்திற்கு எதிரான இந்த படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது கண்டிக்கதக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.இலங்கை செல்லும் பிரதமர் கச்சதீவினை மீட்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யபடுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இலங்கை ராணுவதத்தால் மட்டும் 147 மீனவர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.19 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்திய இலங்கை கடலில் முறை வைத்து மீன்பிடிக்கவும் கச்சத்தீவை மீட்க இலங்கை அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்., இடைக்காலமாக கச்சத்தீவில் மீன் பிடிக்க இலங்கை அரசிடம் அனுமதி பெற்று தர வேண்டும்.,சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் டெல்லி மெட்ரோ நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளதால் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்காது, தமிழ் தெரியாதவர்கள் பணி அமர்த்தப்படுவதன் மூலம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஒப்பந்ததை ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்தினார்.
தெலுங்கானாவில் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு 67 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவின் மாநில அரசின் இடஒதுக்கீடு சட்டத்தை 9 வது அட்டவனையில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்., தமிழ்நாட்டில் 83 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிய முதல்வர்கள் நியமிக்காததால் கல்லூரிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசு கல்லூரிகளின் தரம் சீரழிந்து வருவகிறது.எம்புரான் படத்தில் முல்லைபெரியாறு தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் கூட்டாச்சி தத்துவதற்கும் தேச ஒருமைபாட்டிற்கு எதிராக காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திற்கு எதிரான இந்த படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது கண்டிக்கதக்கது வக்பு வாரிய மசோதாவிற்கு பா.ம.க ஆதரிக்கவில்லை இஸ்ஸாமியர்களின் சொத்துக்களை அவர்களே தான் நிர்வகிக்க வேண்டும்.
அது தான் பாமகவின் நிலைப்பாடு வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தை பாமக உறுப்பினர்கள் ஆதரித்துள்ளது. இது ராஜ்யசபாவிலும் எதிரொலிக்கும்.,வக்பு வாரிய சட்டதிருத்தத்தை கண்டித்து தமிழக முதல்வர் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தது வரவேற்க்கதக்கது.தமிழகத்தில் தொடர் என்கவுண்டர் சம்பங்களால் குற்றங்கள் பெருகி வருகிறது என்பது தெரிகிறது., தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். என உத்தரவிட்ட திருவண்ணாமலை ஆட்சியரை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ கார்த்தி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Advertisements



