ஆயுத பூஜை, விஜய தசமி விழாக்களையொட்டி நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து.!

Advertisements

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி விழாக்களையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்தியில், ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்றுச் சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு அன்னை பராசக்தியைப் போற்றி வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்க முப்பெரும் தேவியரும் எப்போதும் துணை நிற்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், தீமைகள் அழிந்து நன்மைகள் பிறக்கும் ஆயுத பூஜைக் காலத்தில், அன்னை சரஸ்வதியை வணங்கி, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதர்மம் சூழ்ந்திருக்கும் இருண்ட காலம் விரைவில் நீங்கித் தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவ வேண்டிக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *