சென்னை:
நடிகர் விஷால் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் விஷாலின் நெருங்கிய நண்பரான நடிகர் ஜெயம் ரவி விஷால் உடைய உண்மையான நிலை என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே விஷால் பற்றிய செய்திகள்தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. இதுவரைக்கும் கம்பீரமாகக் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த விஷால் சமீபத்தில் நடந்த மதகஜராஜா படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது கைகள் நடுங்க, நிற்கக் கூட முடியாத நிலையில் அவர் இருந்ததை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப் போய்விட்டனர்.
விஷாலுக்கு என்ன ஆச்சு? எதற்காக இப்படி மாறிப் போயிட்டார்? சில மாதங்களுக்கு முன்பு பேட்டிகளில் நன்றாகத் தானே இருந்தார். ஆனால் இப்போது இவர் வயதான தோற்றத்தில் இருக்கிறார்.
முகமெல்லாம் வீங்கிப் போயிருக்கிறது, கண்களில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. அவரால் உட்கார கூட முடியாத நிலையில் இருக்கிறார் என்பதுதான் பலருடைய கேள்வி.
அப்போது தொகுப்பாளராக இருக்கும் திவ்யதர்ஷினி விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் அதற்காக ரெஸ்ட்டில் இருக்கும்போது திரைப்படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நடக்கிறது என்றதும் அதில் தவறாமல் கலந்துகொண்டார்.
இந்தப் படத்திற்காக விஷால் ரொம்பவும் கஷ்டப்பட்டார். அதனால் 12 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் வரப்போகிறது என்றதும் சந்தோஷத்தில் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று படக் குழு தரப்பினர் கூறியுள்ளனர்.
அதைத்தான் விஷாலும் உறுதி செய்து இருந்தார். இப்படியான நிலையில் விஷாலுக்கு அந்தப் பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டது, இந்தப் பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளத்தில் சிலர் பேட்டி கொடுத்துக் கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.
இப்படியான நிலையில் நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பரான ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் பேசும்போது விஷால் பற்றிப் பேசி இருக்கிறார். அதில் விஷாலை பார்த்ததும் எல்லோரும் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய குணத்திற்கும் அவருடைய குடும்பத்தினர் குணத்திருக்கும் அவருக்கு எதுவும் ஆகாது.
அவர் சிங்கம்போல மீண்டும் எழுந்து வருவார். இப்போதைக்கு அவருக்கு நேரம் சரியில்லை. ஏதோ ஒரு சம்திங் நடந்து கொண்டு இருக்கிறது அவ்வளவுதான். வேற எதுவும் கிடையாது. அதுபோல விஷால் பலருக்கு உதவி செய்து இருக்கிறார் அந்தப் புண்ணியம் அவரைச் சீக்கிரமாகப் பழைய நிலைக்குக் கொண்டு வரும்.
இப்போது அவரைப் பற்றிப் பேசுபவர்கள் எதுவோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எதுவும் உண்மை கிடையாது. சமூக வலைத்தளத்தில் தேவை இல்லாமல் பலர் இஷ்டத்துக்கு எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் விஷால் விரைவில் நலம் பெற்று வந்து எல்லோருக்கும் பதில் கொடுப்பார் என்று ஜெயம் ரவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.