மதுரை, கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு? மத்திய அரசின் அதிரடி முடிவு.!

மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்ட விரிவான அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு, மே மாதம் மீண்டும் அளித்த திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கோவையில் 39 கிலோ மீட்டர் தொலைவிற்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்திலிருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது. மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31-கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த உள்ளது.

27 கிலோ மீட்டர் உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரெயில் நிலையங்களும், 4-கிலோ மீட்டர் சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டது. கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியது.

இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு, கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *