“கற்பனைக்கு எட்டாத பதிலடி கொடுக்கப்படும்” : எச்சரித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்.!

Advertisements

பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான செயலுக்கும், அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று, லடாக்கின் டிராஸ் பகுதியில், கார்கில் போர் நினைவிடத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், எச்சரிக்கை விடுத்தார்.
லடாக்கின் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், 27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான செயலுக்கும், அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்றும், எங்கள் நோக்கம் தெளிவாக உள்ளது என்றும், இனி பாகிஸ்தானுடன் எந்தஒரு பேச்சுவார்த்தையும் கிடையாது எனவும், ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியைப் பற்றியதாகத்தான் இருக்கும் எனவும், பயங்கரவாதத்தை உருவாக்குவது பாகிஸ்தான் அரசின் ஒரு கொள்கையாக இருக்கிறது.

பாகிஸ்தானில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை எனவும், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்படுகிறது என்றும், எனவே, பயங்கரவாதிகளையும், பாகிஸ்தான் அரசாங்கத்தையும் இனி இந்தியா தனித்தனியாக பார்க்காது என்பதைத் ஆபரேஷன் சிந்தூரின் போது நாங்கள் தெளிவுபடுத்தினோம் என்றும்,

புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி என்பதில்தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில், மற்ற நாட்டுக்குள் ஊடுருவுவது மற்றும் பயங்கரவாதம் போன்ற வேலைகளைத் தான் பாகிஸ்தான் செய்து வருகிறது என்றும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *