
இந்தித் திணிப்பை முறியடிக்கத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் மொழி உரிமைப் போர், இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் பாஜக நடந்துகொள்வதைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் பாஜக, ஆட்சி செய்யும் மகாராஷ்டிரத்தில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இந்தித் திணிப்பு முயற்சியில் இருந்து இரண்டாம் முறையாகப் பின்வாங்கி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?” என்றும், “இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன – இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?” என்றும் ராஜ் தாக்கரே வினவியுள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
