
இமாச்சலத்தின் தர்மசாலையில் திபெத்திய பவுத்தமதத் தலைவர் தலாய் லாமாவின் பிறந்த நாளையொட்டி நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
திபெத்தைச் சீனா ஆக்கிரமித்த பின் அந்நாட்டுப் பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலை என்னுமிடத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். இன்று அவரது 90ஆவது பிறந்த நாளையொட்டித் தர்மசாலையில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
திபெத்திய நடனக் கலைஞர்களின் சாகசங்களை இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரி உள்ளிட்டோர் கண்டு வியந்தனர்.
