Puducherry: 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!

Advertisements

திருட்டு, கொலை, கொள்ளை வழக்கில் கடந்த6ஆண்டுகளுக்கு மேலாகத் தேடப்பட்ட குற்றவாளியை முதலியார் பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான காவல்துறைனர் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்தனர்.

புதுச்சேரி முதலியார் பேட்டை காவல்நிலையத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு கொலைவழக்கில் உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட குற்றவாளியான தமிழ்மணி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிறைவாசம் எதுவுமின்றி தலைமறைவாகி இருந்தார்.அவர்மீது 3 கொலை வழக்குகள் மற்றும் திருட்டு வழிப்பறி.திண்டிவணம் ஆரோவில், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10ற்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவராகக் கருதபட்ட குற்றவாளியான தமிழ்மணிக்கு எதிராகப் பிடிவாரண்ட் 6ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் முதலியார் பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான காவல்துறைனர் கடந்த 6 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளியைத் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்துக் கைது செய்தனர்.திருட்டு, கொலை, கொள்ளை வழக்கில் கடந்த6ஆண்டுகளுக்கு மேலாகத் தேடப்பட்ட குற்றவாளியை முதலியார் பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான காவல்துறைனர் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *