ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், திமுக அரசு அலட்சியம் !

Advertisements

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தள பதிவில், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டநிலையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வு ஆணையம் சார்பில், தேர்வு நடத்தப்பட்டு தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும்  பணி நியமனம் வழங்குவதில்  என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் எதிர்காலம் மீதும், ஆசிரியர்களின் நல்வாழ்வு மீதும் துளியும் அக்கறையில்லாமல்   அரசு செயல் படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் 50 வயதைக் கடந்து அரசு ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் மனமில்லையா எனவும் கேள்வி எழுப்பினார். இவ்வாறு ஆசிரியர்களின் கோரிக்கைகளையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் தொடர்ந்து திமுக அரச அலட்சியப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *