காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன்: தமிழ்நாடு வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்!

Advertisements

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.

இந்நிலையில், காது கேளாதோருக்கு நடத்தப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் பிரான்சின் ஆலிவர் கிரேவ் உடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்வி சேகர் மோதினார்.

இந்த ஆட்டத்தில் பிரித்வி சேகர் 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் ஆலிவர் கிரேவை வீழ்த்தித் தொடர்ந்து 2வது ஆண்டாகச் சாம்பியன் பட்டம் வென்றார்.

காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கடந்தாண்டும் பிரித்வி சேகர் தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *