
கனடாவில், வரும் 15ஆம் தேதி நடைபெறும் ஜி – 7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க வில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் இடம்பெற்றிருக்கும் அமைப்பான, ஜி – 7 மாநாட்டில் ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன. வட அமெரிக்க நாடான கனடாவில், வரும் 15 மற்றும் – 17ல் ஆம் தேதிகளில் ஜி – 7 மாநாடு நடைபெறுகிறது. ஆனால் இதில் பங்கேற்கும் படி , பிரதமர் மோடிக்கு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆறு ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக ஜி – 7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கனடா காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதால் இரு நாடுகள் இடையே மோசமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக , ஜி – 7 மாநாட்டில் பங்கேற்க மோடி தயாராக இல்லை என கூறப்படுகிறது.



