
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான, ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, தலைமை தேர்தல் ஆணையம், ஐந்து மாநிலத் தலைமை செயலர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதில், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீண்டகாலமாகச் சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தால், அவர்களை உனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
இதையடுத்து, தேர்தல் பணியில் தொய்வு ஏற்படுவதை தடுக்க, மண்டல அளவிலான அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




