
வி.ஏ.ஓ, ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கும் அரசு, அமைச்சர் நேருவை கண்டு கொள்வதில்லை என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாஜக சார்பில் பழினியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, பேசிய அவர் தமிழகத்தின் 39 மாவட்டமாக மார்ச் 5 ஆம் தேதிக்குள் பழனியை தனி மாவட்டமாக அறிவித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இல்லையெனில் வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்து விடுவார்கள் எனவும் கூறினார்.
தமிழக அரசால் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வை நடத்தால் முடியாமல் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால், நீட் தேர்வை நிறுத்தியிருந்தால் கூட சிலர் சந்தோஷப்பட்டு இருப்பார்கள் என்றார்.
தொடர்ந்து, பேசிய அவர் வி.ஏ.ஓ, ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கும் அரசு, அமைச்சர் நேருவை கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டினார்.


