பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்..!

Advertisements

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பீகாரில், 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் 6 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் 11 ஆம் தேதியும் வாக்குபதிவு நடந்தது.

இதைத்தொடர்ந்து, 38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ள நிலையில், 67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஈரடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில், உள்அடுக்கில், ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், வெளிஅடுக்கில் மாநில காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, பீகாரில், தொடர்ந்து 5 ஆவது முறையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *