
NLC Acquisition | Madras High Court | Farmer
என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்குச் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது…
சென்னை : என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கடலூர் விவசாயிகளுக்குச் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக அறுவடை செய்யக் கூடாது என்றும் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
NLC Acquisition | Madras High Court | Farmer
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியம், தொழில், உட்கட்டமைப்பு வளர்ச்சி விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்று கூறியுள்ளார். ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கையகப்படுத்திய நிலங்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

