முந்தும் தவெக.? ஆட்சியை பிடிக்குமா..?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதில், ஆளும் கட்சியான திமுக பெரும் பின்னடைவு சந்தித்து 54 தொகுதிகளில் முன்னிலை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது..

தவெக 100க்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்திலும், அதிமுக 79 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும், சில கருத்துக் கணிப்புகள் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு எனவும், ஒரே ஒரு கருத்துக் கணிப்பு தவெக ஆட்சியை பிடிக்கும் என கணித்திருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மை ஆக்சிஸ் இந்தியா மட்டுமே தவெக 98 – 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்திருந்தது. இந்தச் சூழலில் இன்று காலை 11 மணி நிலவரப்படி தவெக 102 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *