Advertisements

வருகிற மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரை வருகிறார் அன்றைய தினம் பிரேமலதா விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்கிறார் முன்னதாக தேமுதிக சார்பில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குகிறது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது இழுபறியாகவே நீடித்து வருகிறது .
கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூர் கூட்டத்தில் கூட்டணியை அறிவிப்பேன் என்று சொன்ன பிரேமலதா விஜயகாந்த் இன்னமும் தனது முடிவை அறிவிக்கவில்லை .திமுக , பாஜக , தவெக என அனைத்து கட்சிகளிடமும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் .
ஆனால் , பிரேமலதா வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கட்சிகள் நிராகரித்த நிலையில் கூட்டணி முடிவு எடுக்க முடியாமல் பிரேமலதா திண்டாடி வருகிறார்
கடைசியாக திமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மகா சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் பிரேமலதாவும் சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து , தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன், பாஜக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகிய இருவரும் எடப்பாடி பழனிச்சாமி உடன் தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர் .
எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது . சுமார் ஒரு மணி நேரம் இது குறித்து அவர்கள் பேசியுள்ளனர் . பிரதமர் மோடி ஒன்றாம் தேதி மதுரை வருவதற்குள்ளாக தேமுதிகவை எப்படியும் கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என உள்துறை அமைச்சர் உத்தரவு போட்டு இருக்கிறார்.
அந்த வகையில், மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரை வருகிறார் எனவே, அன்றைய தினம் விழா மேடையில் பிரேமலதா விஜயகாந்த் இருக்க வேண்டும் என பேச்சு வார்த்தை நடைபெற்று இருக்கிறது . இதன் அடிப்படையில் எட்டு சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா பதவி ஒதுக்கி தருவது என்றும் தேர்தலுக்கு தேவையான நிதியும் அழிப்பது என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது .
இது குறித்த தகவல் பிரேமலதா விஜயகாந்த்துக்கு சொல்லப்பட்டு அவரும் இறுதி முடிவாக வேறு வழியின்றி இந்த கூட்டணியை ஏற்றுக் கொண்டிருக்கிறார் .இதனைத் தொடர்ந்து வருகிற ஒன்றாம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி மேடையில் பிரேமலதா விஜயகாந்த் கட்டாயமாக இருப்பார் என்பது உறுதியான தகவலாக தெரிகிறது .
இதனைத் தொடர்ந்து , வேட்பாளர்கள் மத்தியில் நேர்காணல் காண்பதற்கான அறிவிப்பையும் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டிருக்கிறார் .
வருகிற 20 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை முதல் கட்ட வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது . ஒவ்வொரு நாளும் மாவட்ட வாரியாக தினந்தோறும் காலை 10 மணி முதல் வேட்பாளர் நேர்காணல்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து , தேமுதிக தரப்பில் கூட்டணி விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதால் கட்சி தொண்டர்கள் தற்போது உற்சாகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பது முக்கிய செய்தியாகும் .
Advertisements


