thirupathi:ரூ.2½ கோடி மதிப்பிலான 5 தங்க கட்டிகள் பறிமுதல்!

Advertisements

திருப்பதி:சென்னையிலிருந்து ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் காரில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அங்குள்ள வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தனி பிரிவு அதிகாரிகள் சவுட்டுபல் பந்தாங்கி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையிலிருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்தக் காரில் 3 பேர் இருந்தனர். காரின் ஹேண்ட் பிரேக் அடியில் ஒரு சிறிய பெட்டி அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனைத் திறக்குமாறு கூறினர்.

அப்போது காரில் வந்தவர்கள் அது சாதாரணமானது தானெனக் கூறி திறக்க மறுத்தனர். அதிகாரிகளின் கடுமையான விசாரணைக்குப் பிறகு கிளைட்ச் அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு சுவிட்ச் மூலம் ஹேன்ட் பிரேக் அடியில் இருந்த சிறிய பெட்டியைத் திறந்தனர்.

அதில் ரூ.2½ கோடி மதிப்பிலான 5 தங்க கட்டிகள் இருந்தன. இந்தத் தங்க கட்டிகள் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து ஆந்திரா, தெலுங்கானா வழியாகக் கர்நாடக மாநிலம் பிதார் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தங்க கட்டிகள் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர். அதனைக் கடத்தி வந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.சென்னையில் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *