
மம்மூட்டி, திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” திரைப்படம் மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
தற்போது, இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் மம்மூட்டி நடித்து வருகிறார். அவர், டெல்லியில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்-ஐ சந்தித்தார். மம்மூட்டியுடன் அவரது மனைவி சுல்ஃபத் மற்றும் சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் இருந்தனர். துணை குடியரசு தலைவருடன் அவரது மனைவி சுதீஷ் தன்கரும் உடன் இருந்தார்.
மோகன் லால் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மம்மூட்டி விரைவில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுகிறது.
