சென்னைக்கு பெரிய புயல் ஆபத்து: எச்சரிக்கை தகவல்..! 

Advertisements
தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் மழை கொட்டி தீர்க்கிறது. மேக வெடிப்பின் காரணமாக தற்பொழுது சென்னையில் கனமழை பொழிவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமடையால் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு இருக்கும் என்றும் சென்னையில் இந்த ஆண்டு புயல் ஆபத்து இருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் கூறும் பொழுது வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு காலகட்டத்தில் குறிப்பாக அக்டோபர் நவம்பர் டிசம்பர் காலங்களில் வளிமண்டலம் மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளை பார்க்கும் பொழுது நமக்கு எல் நினா என்ற புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்தாண்டுகள் எல் நினா ஆண்டுகளாக அமைந்திருக்கிறது.
இந்த எல் நினா மற்றும் அதன் காரணிகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும் . வடகிழக்கு பருவமழை சற்று தாமதம் அடைந்தாலும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தீவிர மழைப்பொழிவு இருப்பதுடன் தாழ்வு காற்றழுத்த பகுதி தாழ்வு மண்டலம் புயல் போன்ற அமைப்புகள் உருவாகி மிகப்பெரிய காற்றுடன் அதிகபட்ச மழை பொழிவு இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை சென்னையை 6 புயல்கள் தாக்கியுள்ளன . இதில் கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் தாக்கியது.  கடந்த 2023 ஆம் ஆண்டு மிச்சாம் புயல் தாக்கியது கடந்த 2022 ஆம் ஆண்டு மண்டோஸ் புயல் தாக்கியது ஆகியவை குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் லா நினா புயல் தாக்க கூடும் என்பது எச்சரிக்கை தகவல் ஆகும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *