Tamilaga Vetri Kazhagam: விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியதை வரவேற்று அவரது ரசிகர்கள் புதுச்சேரியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாகவும் படிப்படியாக மாற்றி வந்தார். அந்த வகையில், மக்கள் இயக்கத்தினரை அரசியலுக்கு தயார் செய்யும் வகையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை போட்டியிட வைத்து வெற்றியும் பெற்றார். அதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.

நடிகர் விஜய் கட்சியின் பெயருக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் தலைவராக நடிகர் விஜய் செயல்பட இருக்கிறார். இதற்கான நீண்ட அறிக்கையை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதனை வரவேற்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள்பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.அந்தவகையில் புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் 300கும் மேற்பட்டோர் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியுடன் ஆரவாரத்துடன் பைக் பேரணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *