Advertisements

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று மீண்டும் கூடுகிறது. சட்டப்பேரவையில் இன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
முதல் நாளில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்றுவார்கள்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பதில் உரையாற்றுவார்கள். மேலும், அவர்கள் துறைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளனர்.
Advertisements


