Advertisements

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூரில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறைக் கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Advertisements


