PSLV C-58 Rocket: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

Advertisements

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், `எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்தச் செயற்கைக்கோள் பூமியிலிருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இதுதவிர காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.

வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *