Advertisements

மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறோம் என்று சொன்னார்களே தவிர அரசியலில் பல தவறுகளை செய்தவர்களுக்கு புகலிடம் கொடுப்பதற்காக அல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையினான அரசிற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் தங்களது பதவி ஆசைக்காக அதுவரை இருந்த கூட்டணியை உடனே முறித்துக் கொண்டு செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குற்றம் சாட்டினார்.
சுயநலத்திற்காக பல முடிவுகள் எடுத்துவிட்டு பாஜக மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார். மேலும் மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறோம் என்று சொன்னார்களே தவிர இதே போல அரசியலில் பல தவறுகளை செய்தவர்களுக்கு புகலிடம் கொடுப்பதற்காக அல்ல என்றும் வருங்கால தமிழகம் இதை உணர்த்தும் என்றும் பதிவிட்டுள்ளார்.
Advertisements




